
அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி நடித்த ஹமாரே பாரா திரைப்படத்தினை வெளியிட மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முஸ்லிம் மதத்தினை இழிவான முறையில் சித்திரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
ஹமாரே பாரா திரைப்படம் ஜூன் 7-ல் நாடு முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், முஸ்லிம் அமைப்புகள் திரைப்படத்தினை வெளியிடத் தடைகோரி, மாநில அரசுக்கு மனுக்கள் வந்தன.
பெறப்பட்ட மனு ஒன்றில், படத்தின் முன்னோட்ட விடியோ முஸ்லீம் மதத்தினை ஆத்திரமூட்டும் வகையில் இழிவாக முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திரைப்படங்களை வெளியிட அனுமதித்தால், அது மதங்கள் மற்றும் சாதிகளுக்கு இடையே வெறுப்புணர்வை உண்டாக்கும். நாட்டிலுள்ள ஒரு மதத்தை வேண்டுமென்றே குறிவைத்து, வகுப்புவாத நல்லிணக்கத்தை சேதப்படுத்தவும், நாட்டில் அமைதியின்மையை உருவாக்கவும், முஸ்லிம் மதத்தின் உணர்வுகளை புண்படுத்துவதற்காகவே இதுபோன்ற திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. திரைப்படங்கள் சமூகத்தில் வழிகாட்டியாக இருக்க வேண்டும்; மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வினை ஏற்படுத்தக்கூடாது. அதன்படி, ஜூன் 07,2024 அன்று நாடு முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திரைப்படமான ’ஹமாரே பாரா’வை வெளியிட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஹமாரே பாராவின் வெளியீட்டை இரண்டு வாரங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை மும்பை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது.
ஹமாரே பாரா திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பிரேந்தர் பகத் மற்றும் ரவி எஸ் குப்தா ஆகியோர் திரைப்படத்திற்கு உரிய தணிக்கைச் சான்றிதழைப் பெற்ற போதிலும், தங்கள் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.