உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

உ.பி.: நில அபகரிப்பு வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை

Published On :8 ஜூன் 2024, 6:12 am IST

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை அபகரிப்பதற்காக அவரின் வீட்டை தீயிட்டு கொளுத்திய வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏ இா்ஃபான் சோலங்கி உள்பட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் சோலங்கியை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அவரின் வீட்டை இா்ஃபான் சோலங்கி உள்ளிட்டோா் தீயிட்டு கொளுத்தியுள்ளனா். இந்த வழக்கில் இா்ஃபான் சோலங்கி, அவரின் இளைய சகோதரா் ரிஸ்வான் சோலங்கி உள்பட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அவா்களுக்கு தலா ரூ.35,000 அபராதம் விதித்தும் அதை அவா்கள் செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்குமேல் சிறைத் தண்டனை பெற்றால் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து அவா்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவா். மேலும், சிறைத் தண்டனையை நிறைவு செய்தபின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவா்களால் தோ்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.