19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

தலைவராகும் தகுதியை மோடி இழந்துவிட்டார் -சோனியா விமர்சனம்!

”தார்மிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்றுவிட்டார் மோடி”

படம் | பிடிஐ

Updated On :

”தார்மிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்றுவிட்டார் மோடி” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், செய்தியாளர்களுடன் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 3வது முறையாக பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.

சோனியா காந்தி கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. 400 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறி வந்த மோடி, தோல்விக்கு பொறுப்பேற்று தலைமை பதவியிலிருந்து விலக வேண்டும், மாறாக அவர் மீண்டும் பிரதமராக நாளை(ஜூன் 9) பதவியேற்கும் முனைப்பில் உள்ளார்.

மோடி தான் கூறியபடி வெற்றியை பெறவில்லை. அவர் தார்மிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்றுவிட்டார். இதன்மூலம், தலைவராகும் தகுதியை, உரிமையை இழந்துவிட்டார். அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் செய்துகொள்வார் என்றோ, மக்களின் மனநிலையைப் புரிந்து நடப்பார் என்றோ நாம் எதிர்பார்ப்பது தவறு.

Story image

படம் | பிடிஐ

நம் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும், நாடாளுமன்ற அரசியலை மீண்டும் அதன் பாதையில் பயணிக்க வைக்கவும், நமக்கான மறு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இருந்ததைப் போல, நாடாளுமன்றத்தை சிதைக்கும் அவர்களது எண்ணம் இனி ஒருபோதும் நிறைவேறாது. இந்திய அரசமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள சமத்துவ, ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் முயற்சிகளை தடுப்பதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் விழிப்புடன் இருந்து, தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.