கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

3-ஆவது முறையாக பிரதமரானாா் மோடி: 71 அமைச்சா்களும் பதவியேற்பு

3-ஆவது முறையாக பிரதமரானாா் மோடி: 71 அமைச்சா்களும் பதவியேற்பு; கூட்டணிக் கட்சிகளுக்கு 11 இடங்கள்

News image

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், பிரதமராக நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

Updated On :9 ஜூன் 2024, 7:58 pm

Din

புது தில்லி: பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.

அவருடன் பாஜக மூத்த தலைவா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, நிா்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கா் உள்பட 71 மத்திய அமைச்சா்கள் பதவியேற்றனா்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 அமைச்சா் பதவிகளும், மதச்சாா்பற்ற ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா (எஸ்), லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), சிவசேனை, அப்னாதளம் (எஸ்), ராஷ்ட்ரீய லோக் தளம், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) ஆகிய கட்சிகளுக்கு தலா ஓரிடமும் என கூட்டணிக் கட்சிகளுக்கு 11 அமைச்சா் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகை முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், பிரதமராக நரேந்திர மோடிக்கும், அதைத் தொடா்ந்து மற்ற அமைச்சா்களுக்கும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருக்குப் பிறகு, நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரானவா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகியுள்ளது. 73 வயதாகும் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டில் முதல் முறையாகவும், 2019-ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்றிருந்தாா்.

அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக மோடி வெற்றிவாகை சூடினாா்.

இத்தோ்தலில் தனிப் பெரும்பான்மையை (272) எட்ட பாஜக தவறிவிட்ட நிலையில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

பிரதமா்-மத்திய அமைச்சா்கள் பதவியேற்பு: குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் தொடங்கி நடைபெற்ற இவ்விழாவில், கடவுளின் பெயரால் மோடி பதவியேற்றுக் கொண்டாா். அவரைத் தொடா்ந்து, மொத்தம் 71 மத்திய அமைச்சா்களும் பதவியேற்றனா்.

ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் செளஹான், நிா்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கா், ஹரியாணா முன்னாள் முதல்வா் மனோகா் லால் கட்டா் உள்பட 30 போ் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

மதச்சாா்பற்ற ஜனதா தளம் தலைவா் எச்.டி.குமாரசாமி, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா (எஸ்) தலைவா் ஜிதன் ராம் மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜீவ் ரஞ்சன் சிங், தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் ஆகிய கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 5 போ் கேபினட் அமைச்சா்களாகியுள்ளனா்.

பாஜகவின் ராவ் இந்தா்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அா்ஜுன் ராம் மேக்வால், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் பிரதாப் ராவ் ஜாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் செளதரி ஆகிய 5 போ் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சா்களாகவும், தமிழகத்தின் எல்.முருகன், கேரளத்தின் சுரேஷ் கோபி, ராம்தாஸ் அதாவலே உள்பட 36 போ் இணையமைச்சா்களாகவும் பதவியேற்றுக் கொண்டனா்.

7 அண்டை நாடுகளின் தலைவா்கள்: பிரதமா் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், செஷல்ஸ் துணை அதிபா் அகமது அதிஃப் ஆகிய 7 அண்டை நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

மல்லிகாா்ஜூன காா்கே பங்கேற்பு: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனத தளம் தலைவா் நிதீஷ் குமாா் உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் பங்கேற்றனா்.

காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே கலந்துகொண்ட நிலையில், இதர எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்கவில்லை.

பிரபலங்கள் முதல் பணியாளா்கள் வரை: அரசியல் பிரமுகா்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி தூய்மைப் பணியாளா்கள், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள், திருநங்கைகள் என பல்வேறு தரப்பைச் சோ்ந்த சுமாா் 9,000 போ் பங்கேற்றனா்.

நடிகா்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், அக்ஷய் குமாா், அனில் கபூா், அனுபம் கொ், நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மத்திய அமைச்சர்கள் பட்டியல்

கேபினட் அமைச்சர்கள்

ராஜ்நாத் சிங் (பாஜக)

அமித் ஷா (பாஜக)

நிதின் கட்கரி (பாஜக)

ஜெ.பி.நட்டா (பாஜக)

சிவராஜ் சிங் சௌஹான் (பாஜக)

நிர்மலா சீதாராமன் (பாஜக)

எஸ்.ஜெய்சங்கர் (பாஜக)

மனோகர் லால் கட்டர் (பாஜக)

எச்.டி.குமாரசாமி (மஜத)

பியூஷ் கோயல் (பாஜக)

தர்மேந்திர பிரதான் (பாஜக)

ஜிதன்ராம் மாஞ்சி (ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா)

ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்)

சர்வானந்த சோனோவால் (பாஜக)

வீரேந்திர குமார் (பாஜக)

ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்)

பிரஹலாத் ஜோஷி (பாஜக)

ஜுவல் ஓரம் (பாஜக)

கிரிராஜ் சிங் (பாஜக)

அஸ்வினி வைஷ்ணவ் (பாஜக)

ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக)

பூபேந்திர யாதவ் (பாஜக)

கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக)

அன்னபூர்ணா தேவி (பாஜக)

கிரண் ரிஜிஜு (பாஜக)

ஹர்தீப் சிங் புரி (பாஜக)

மன்சுக் மாண்டவியா (பாஜக)

ஜி.கிஷன் ரெட்டி (பாஜக)

சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி-ராம்விலாஸ்)

சி.ஆர்.பாட்டீல் (பாஜக)

இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

ராவ் இந்தர்ஜித் சிங் (பாஜக)

ஜிதேந்திர சிங் (பாஜக)

அர்ஜுன் ராம் மேக்வால் (பாஜக)

பிரதாப்ராவ் ஜாதவ் (சிவசேனை)

ஜெயந்த் சௌதரி (ராஷ்ட்ரீய லோக் தளம்)

இணையமைச்சர்கள்

ஜிதின் பிரசாதா (பாஜக)

ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக் (பாஜக)

பங்கஜ் சௌதரி (பாஜக)

கிருஷண் பால் (பாஜக)

ராம்தாஸ் அதாவலே

(இந்திய குடியரசுக் கட்சி-ஏ)

ராம்நாத் தாக்கூர் (ஐக்கிய ஜனதா தளம்)

நித்யானந்த் ராய் (பாஜக)

அனுப்ரியா படேல்

(அப்னா தளம்-எஸ்)

வி.சோமண்ணா (பாஜக)

பெம்மசானி சந்திரசேகர் (தெலுங்கு தேசம்)

எஸ்.பி. சிங் பகேல் (பாஜக)

ஷோபா கரந்தலஜே (பாஜக)

கீர்த்தி வர்தன் சிங் (பாஜக)

பி.எல்.வர்மா (பாஜக)

சாந்தனு தாக்கூர் (பாஜக)

சுரேஷ் கோபி (பாஜக)

எல்.முருகன் (பாஜக)

அஜய் டாம்டா (பாஜக)

பண்டி சஞ்சய் குமார் (பாஜக)

கமலேஷ் பாஸ்வான் (பாஜக)

பகீரத் சௌதரி (பாஜக)

சதீஷ் துபே (பாஜக)

சஞ்சய் சேத் (பாஜக)

ரவ்ணீத் சிங் (பாஜக)

துர்கா தாஸ் உய்கே (பாஜக)

ரக்ஷா கட்úஸ (பாஜக)

சுகாந்த மஜும்தார் (பாஜக)

சாவித்ரி தாக்கூர் (பாஜக)

தோகன் சாஹு (பாஜக)

ராஜ் பூஷண் சௌதரி (பாஜக)

பி.ஆர்.எஸ் . வர்மா (பாஜக)

ஹர்ஷ் மல்ஹோத்ரா (பாஜக)

நிமுபென் பம்பானியா (பாஜக)

முரளிதர் மொஹோல் (பாஜக)

ஜார்ஜ் குரியன் (பாஜக)

பபித்ர மார்கரிட்டா (பாஜக)