சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டோகன் சாஹு, ஞாயிற்றுக்கிழமை மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தொகுதியை தவிர மற்ற 10 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தாலும், அம்மாநிலத்தில் இருந்து முதல்முறையாக எம்பியாக தேர்வாகியுள்ள டோகன் சாஹுவுக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சத்தீஸ்கரில் செல்வாக்கு மிகுந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகமான சாஹு பிரிவைச் சேர்ந்த டோகன், பிலாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் தேவேந்திர யாதவை 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு சூரஜ்புரா கிராம பஞ்சாயத்தின் தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய டோகன், 2013-ல் லோர்மி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2018 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டோகனுக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில், பாஜக கிஷன் மோர்சாவின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய டோகன், 30 ஆண்டுகளில் மத்திய அமைச்சராக உருவெடுத்துள்ளது பாஜக தலைவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எப்ஸ்டீன் கோப்புகள்! ஹர்தீப் சிங் புரியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

திமுக கூட்டணி! கை கொடுக்குமா, காலை வாருமா காங்கிரஸ்?

தமிழ்நாடு - சட்டப்பேரவைத் தேர்தல்கள் - இதுவரை...

சுயமாக இயங்கும் புதுச்சேரி அரசு: 60% வாக்குகளைப் பெறுவோம்! காரைக்காலில் அமித் ஷா!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

