மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிபிஐ 'மெத்தன' விசாரணையால் ஊழல் வழக்கில் 9 குற்றவாளிகள் விடுதலை

சிபிஐ 'மெத்தனத்தால்' 9 குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்

News image
Updated On :11 ஜூன் 2024, 10:20 am

DIN

புது தில்லி: ஒரு நிறுவன மற்றும் நான்கு வங்கி அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட ஊழல் வழக்கில், சிபிஐயின் மெத்தனமான விசாரணையை காரணம் காட்டி, தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு கனரா வங்கியில் ரூ.4.8 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், 2015ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கில், ஜூன் 3 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நீதிமன்றத்துக்கு உரிய ஆதாரங்களுடன் கொண்டு வரத் தவறிவிட்டது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கிடையில் சதித் தொடர்பு இருப்பதாக நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு, ஹர்ப்ரீத் ஃபேஷன் தனியார் நிறவனத்தின் உரிமையாளர்கள் செய்த முறைகேட்டினை முறைப்படி சிபிஐ நிரூபிக்கவில்லை.

வங்கியால் கொடுக்கப்பட்ட கடன்தொகை 47 விதமான காசோலைகள் மூலம், ஹர்ப்ரீத் ஃபேஷன் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த காசோலைகள் மட்டுமே குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகிவிட முடியாது. அதனை முறையாக விசாரித்து தகவல்களை சேகரித்திருக்க வேண்டும். வங்கிக் கணக்குகளையோ, வங்கி விவரங்களையோ, வரி செலுத்தியது தொடர்பான தகவல்களையோ சிபிஐ அதிகாரிகள் ஆராய வில்லை. வெறும் காசோலைகளை மட்டும் வைத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது. விசாரணையின்போது வங்கித் தரப்பில் போதுமான ஆவணங்கள் கொடுக்கப்படவில்லை என்று சிபிஐ பொறுப்பட்ட வாதங்களை வைத்துள்ளது. விசாரணையின் மெத்தனத்தால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.