

மத்திய அமைச்சர்களின் துறைகள் திங்கள்கிழமை இரவு வெளியான நிலையில், அமைச்சர்கள் அலுவலகங்களில் முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை இரவு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, முறைப்படி அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிற அமைச்சர்களின் துறைகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தில் உள்ள அவரவர் அமைச்சரவையின் அலுவலகங்களுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மனோகர் லால் கட்டர், ஜெய்சங்கர், அஸ்வினி வைஸ்ணவ், பூபேந்தர் யாதவ், கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதேபோல், மத்திய இணையமைச்சராக எல்.முருகன், நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோரும் நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.