
மேற்கு வங்கத்தில் வாக்குப் பதிவுக்கு முன்பும் வாக்குப் பதிவின்போதும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என பணி மாற்றம் செய்யப்பட்ட நான்கு உயர்நிலை காவல் அதிகாரிகள் பழைய பொறுப்புக்கு மீண்டும் திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேஷ்காளி காவல் சரகத்துக்கு உள்பட்ட பாசிர்ஹட் துணைகோட்ட எஸ்டிபிஓ அமினுல் இஸ்லாம் கான் உள்ளிட்ட அதிகாரிகள் நால்வர் பழைய பதவிகளுக்கு திரும்புகின்றனர்.
வாக்குப் பதிவுக்கு முன்னர் கான் மீது பாஜக தரப்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக கான் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம் கானை பணி மாற்றம் செய்தது மட்டுமில்லாமல் தேர்தலோடு தொடர்புடைய எந்த பணியிலும் இடம்பெறக்கூடாது என ஆணையிட்டது.
ஹெளரா ஊர்ப்புற டிஎஸ்பி அமிதாபா கோனர், கந்தி துணைவட்டார எஸ்டிபிஓ திபாகர் தாஸ் மற்றும் டார்ஜிலிங் டிஎஸ்பி அசாருதீன் கான் ஆகியோரும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்கள் மீண்டும் பழைய பொறுப்புகளை ஏற்கத் தேவையான ஏற்பாடுகள் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் படிப்படியாக அவர்களின் பணிக்கு மீண்டும் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.