
ஜார்க்கண்ட்டில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மாநில தலைநகரம் ராஞ்சியிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்சார் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய தன்சார் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி மனோஜ் பாண்டே, பாதிக்கப்பட்ட சிறுமி தனது காதலன் தனது வீட்டுக்கு அழைத்ததால் வீட்டிற்குச் சென்றுள்ளார். காதலன் 18 வயது பூர்த்தியாகாதவர். அங்கு தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அறையில் பூட்டி வைத்துவிட்டு மறுநாள் மாலையில் 5 நண்பர்களுடன் வீட்டினருகே உள்ள புதரின் அருகே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அப்போது காதலன் உள்பட 5 பேரும் தப்பியோடியதாகவும், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறினார்.
வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் மட்டுமின்றி, அவர்களின் ஒருவன் விடியோ பதிவும் செய்துள்ளதாகக் கூறிய அதிகாரி, காதலனின் வீட்டில் செல்போனை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறுமியின் காதலனுக்கும் 18 வயது ஆகவில்லை, அவர்களின் பெற்றோர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
குழந்தைகள் நல வாரிய அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்புக்காக காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.