ஆப்பிள் ஐஓஎஸ் 18-ல் நம்பமுடியாத பல புதிய அம்சங்கள்!

ஆப்பிள் நிறுவனம் மிகமுக்கிய அம்சங்களை இணைத்து தனது இயங்குதளத்தை (ஐஓஎஸ் 18) மேம்படுத்தியுள்ளது.
ஆப்பிள் ஐஓஎஸ் 18-ல் நம்பமுடியாத பல புதிய அம்சங்கள்!
Published on
Updated on
2 min read

ஆப்பிள் நிறுவனம் மிகமுக்கிய அம்சங்களை இணைத்து தனது இயங்குதளத்தை (ஐஓஎஸ் 18) மேம்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் செய்யறிவு தொழில்நுட்பத்தில் பல முக்கிய அம்சங்களை தனது ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது ஐஓஎஸ் 18 என்ற இயங்குதளத்தில் செய்யறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சில அம்சங்களை இணைத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் பாராம்பரிய முறைகளை பின்பற்றியே அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பம்சங்கள் மின்னஞ்சல் அனுப்புவது - பல தளங்களில் செயலிகளை பயன்படுத்துவது - என பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

திரையில் செயலிகளின் இடங்களை தேவைக்கேற்ப வைத்துக்கொள்ளும் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. திரையை டார்க் மோடிற்கு கொண்டுசென்றால் செயலிகளும் தேவைக்கேற்ப தங்கள் நிறத்தை சீரமைத்துக்கொள்ளும்.

செயலிகளுக்கு நிறங்களை தேவைக்கேற்ப கூட்டிக்கொள்ளும் வகையில் செய்யறிவு நிறமூட்டி அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மையம் கூடுதலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பல செயலிகளை அதிவேகத்தில் இயக்க முடியும் - பெரும்பாலான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் இந்த இந்த அம்சம் ஆப்பிள் ஐஓஎஸ் 18-ல் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்முறையாக மூன்றாம்பட்ச செயலிகளையும் ஐஓஎஸ் 18 இயங்குதளத்தின் கட்டுப்பாட்டு மையத்தால் இயக்க முடியும்.

தரவு பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தளத்தில் இயங்கும் வகையிலும், குறிப்பிட்ட இடங்களில் இயங்காத வகையிலும் செயலிகளை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இதன்மூலம், தரவு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

குறுஞ்செய்திகளில் பெரும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகளை எந்தவிதமான எமோஜிகளையும் பயனர்கள் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், சில இடங்களை தடிமனாக்கி காட்டுவது, அடிக்கோடிட்டு காட்டுவது, சாய்வு எழுத்துரு என பல அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் வழியாகவும் குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஐஓஎஸ் 18 மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் போன்று குறுஞ்செய்தி எப்போது சென்று சேர வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுடன் அதிக திறன் வாய்ந்த விடியோ / புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com