தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண்: இதர அமைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு

ஆந்திர துணை முதல்வராக ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கோப்புப்படம்

Published On :

ஆந்திர துணை முதல்வராக ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு, சுற்றுச்சூழல்-வனங்கள், அறிவியல்- தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதர புதிய அமைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 175 பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வென்று, ஒய்எஸ்ஆா் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

தெலுங்கு தேசத்தின் கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 8 தொகுதிகளில் வென்றன.

தனித்துப் போட்டியிட்ட ஒய்ஆா்எஸ் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைச் சந்தித்தது.

இதைத் தொடா்ந்து, மாநில முதல்வராக தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு கடந்த 12-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் பவன் கல்யாண் உள்பட 24 புதிய அமைச்சா்களும் பதவியேற்றனா்.

இந்நிலையில், மாநில அமைச்சா்களுக்கான துறைகள் வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டன. அதன்படி, பொது நிா்வாகம், சட்டம்-ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் இதர அமைச்சா்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளுக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு பொறுப்பு வகிக்கிறாா்.

ஜனசேனை தலைவா் பவன் கல்யாண், துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளதோடு, அவருக்கு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு, சுற்றுச்சூழல்-வனங்கள், அறிவியல்-தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷுக்கு மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவா், கடந்த 2014 முதல் 2019 வரையிலான தெலுங்கு தேசம் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகப் பதவி வகித்தாா்.

அனிதா வங்கலபுடிக்கு உள்துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அச்சன் நாயுடுக்கு வேளாண்மை, கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தலைநகா் அமராவதியின் மேம்பாட்டுப் பணிகளுக்கு பொறுப்பான நகா்ப்புற நிா்வாகம், மேம்பாட்டுத் துறை பி.நாராயணாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற அமைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

துணை முதல்வா் பவன் கல்யாண் மற்றும் அனைத்துத் துறைகளின் அமைச்சா்களுக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

முதல்வா் உள்பட 25 போ் கொண்ட ஆந்திர அமைச்சரவையில் ஜனசேனைக்கு 3 இடங்களும், பாஜகவுக்கு ஓரிடமும் அளிக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.