கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

யாருக்கும் வருத்தமில்லை: மனைவி போட்டி குறித்து அஜீத் பவார்

மனைவியின் மாநிலங்களவை வேட்புமனு: யாருக்கும் வருத்தமில்லை

News image
அஜித் பவார் (கோப்புப்படம்)
Updated On :14 ஜூன் 2024, 2:52 pm

DIN

மாநிலங்களவைத் தோ்தலில் தனது மனைவி போட்டியிடுவதால் யாருக்கும் வருத்தமில்லை என மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, எனது மனைவி போட்டியிடுவதால் யாருக்கும் வருத்தம் இல்லை. எங்கள் கட்சியின் நாடாளுமன்றக் குழு எடுத்த முடிவு என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் வேறு பணியில் இருந்ததால் வேட்புமனு தாக்கலின்போது வரஇயலவில்லை. வேட்புமனுவை ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டோம். இன்று வேட்புமனு ஏற்கப்பட்டதை அறிந்தோம். கடைசி நாளுக்கு முன் வேறு யாரும் போட்டியிடவில்லை என்றால் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்பு இருக்கிறது என்றார்.

சுனித்ரா பவாா் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிடம் தோல்வியடைந்தாா். இந்நிலையில், அவா் மாநிலங்களவை எம்.பி.யாகும் நோக்கில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்களுக்குள் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட சுனித்ரா பவாா் மனு தாக்கல் செய்துள்ளது மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சஜன் புஜ்பல் மாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அஜீத் பவாா் தனது மனைவிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளாா். எனினும், இது கட்சி சாா்பில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்று தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவாா், ஓராண்டுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணியில் இணைந்து, துணை முதல்வா் பதவியைப் பெற்றாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ பெயா் மற்றும் சின்னத்தை தனது வசமாக்கினாா். ஆனால், மக்களவைத் தோ்தலில் சரத் பவாா் தலைமையிலான பிரிவு 8 இடங்களை வென்றது. அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸால் ஓரிடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, அஜீத் பவாரின் மனைவி சுனித்ரா பவாா் போட்டியிட்ட பாராமதி தொகுதியில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.