நீட் தோ்வில் நாடு முழுவதும் 67 போ் 720-க்கு 720 பெற்றது பெரும் சா்ச்சையாகியுள்ளது.
முன்னதாக, நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத் தோ்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ‘நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது’ என்று மாணவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதைத் தொடர்ந்து முறைகேடு புகாா் எழுந்து நிலையில் நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. நீட் தோ்வு குளறுபடிகளைக் கண்டித்தும், மறு தேர்வு நடத்தக்கோரியும் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தேசிய தோ்வு முகமை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமா்வு, இதுதொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தவா்கள் பதிலளிக்குமாறும், பிற மனுக்கள் மீது ஜூலை 8-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.
வழக்கு விசாரணையில் நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவா்களில் மறுதோ்வை எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி தோ்வு நடத்தப்படவுள்ளதாகவும் மத்திய அரசு வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர்(என்எஸ்யுஐ) புதுதில்லியில் இன்று(ஜூன் 15) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


