செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

களைகட்டிய தீபாவளி! நாடு முழுவதும் ரூ.7 லட்சம் கோடிக்கு வணிகம்!

களைகட்டிய தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுவதும் ரூ.7 லட்சம் கோடிக்கு வணிகம் நடந்துள்ளது பற்றி..

தீபாவளி விற்பனை

Updated On :

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டுள்ள நிலையில், ஜவுளி, நகை, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என ரூ. 7 லட்சம் கோடிக்கு வணிகம் நடந்திருப்பதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளில், தீபாவளிப் பண்டிகைக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகமாகும் என்று அகில இந்திய வர்த்தகங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

தலைநகர் தில்லியில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு வணிகமாகியிருப்பதாகவும், தமிழ்நாட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஜவுளி வியாபாரம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைக்கு அமோக விற்பனை நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு விற்பனை அளவு கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜவுளி, தங்க நகைகள் மட்டுமல்லாமல், பல்வேறு சலுகைகள் அறிவிப்பினால் வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனையும் இந்த ஆண்டு அமோகமாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஒரு சில மாதங்களாக தங்கம் விலை உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், சற்று விலை குறைந்திருந்ததால், தங்கம், வெள்ளி விற்பனையும் வழக்கமான அளவில் நடந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அகல் விளக்கு, தோரணம் முதல் பட்டாசு, ஆடைகள், நகைகள், வாகனங்கள் என ஏராளமான பொருள்களை மக்கள் வாங்கிக் குவித்துள்ளனர்.

இந்த தீபாவளிப் பண்டிகையின்போது, வெறும் வணிகம் என்று மட்டுமல்லாமல், சிறு வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், போக்குவரத்துத் துறை, பாக்கெட் செய்வோர், சிறு உற்பத்தித் துறையினர் என பல துறையினருக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

கடந்த 2025ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.5.40 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெற்றிருந்ததாகவும், ரூ.65 ஆயிரம் கோடிக்கு சேவைகள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Summary

Diwali in full swing! Business worth Rs 7 lakh crore across the country!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.