உத்தரகண்டில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி!
உத்தரகண்டில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலியாகியுள்ளனர்.


உத்தரகண்ட்டின் பௌரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகளில் இரண்டு கார்கள் விழுந்து ஐந்து பேர் பலியாகினர்.
கிர்சு சௌபட்டா மற்றும் சத்புலி ஆகிய பகுதிகளில் அருகே உள்ள பள்ளத்தாக்குகளில் இரண்டு கார்கள் விழுந்து ஐந்து பேர் பலியாகினர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
ஒருநாள் முன்னதாக ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களை ஏற்றி வந்த டெம்போ டிராவலர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 14 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். அதில், 12 பேர் காயமடைந்தனர்.
மாநில பேரிடர் மீட்புப் படையிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கிர்சு சௌபட்டாவில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார் சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில், சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகே திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற கார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். அதில் 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், பள்ளத்தாக்கில் இருந்து மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...