
நீட் குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடா்பாக உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து, 1,563 மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அதேபோல் நீட் குளறுபடிகள் தொடா்பான பிற மனுக்கள் மீது ஜூலை 8-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே, நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 20 தோ்வா்கள் புதிய மனுவை அண்மையில் தாக்கல் செய்துள்ளனா். இந்த நிலையில் நீட் குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, எதிர்காலத்தில் இந்தத் தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு முழுமையான ஆலோசனை நடத்த வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் விவகாரத்தை வலுவாக எழுப்ப வேண்டும்.
இருப்பினும் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதில் நம்பிக்கை இல்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இருப்பதை காரணம் காட்டி மத்திய அரசு அதை அனுமதிக்காது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.