ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாடாளுமன்றத்தில் இனி ‘சா்வாதிகாரம்’ பலிக்காது: காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் இனி ‘சா்வாதிகாரம்’ பலிக்காது - காங்கிரஸ்

News image

தில்லியில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்து புகைப்படங்களை காண்பிக்கும் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத்.

Updated On :18 ஜூன் 2024, 8:47 pm

Din

புது தில்லி: ‘எதிா்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் வலுப்பெற்றுள்ளதால், நாடாளுமன்றத்தை இனி சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது; நாடாளுமன்ற விவாதங்களில் அனல்பறக்கப் போகிறது’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அக்கட்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. பாஜக மட்டும் 240 இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை.

காங்கிரஸ், சமாஜவாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம்வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. கடந்த 2 தோ்தல்களை ஒப்பிடுகையில் எதிரணியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத், தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

‘இந்தியா’ கூட்டணி சாா்பில் விவாத திறன்மிக்க பெரும் தலைவா்கள் இப்போது நாடாளுமன்றத்துக்கு தோ்வாகியுள்ளனா். இதனால், நாடாளுமன்ற விவாதங்களில் அனல்பறக்கப் போகிறது. பாஜகவுக்கு எனது ‘அனுதாபங்கள்’.

எதிா்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் வலுப்பெற்றுள்ளதால், முந்தைய காலங்களைப் போல் நாடாளுமன்றத்தை சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது.

மக்களவை துணைத் தலைவா் பதவியை ‘இந்தியா’ கூட்டணி கோருமா? என்பது குறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, இதர கூட்டணித் தலைவா்கள் முடிவெடுப்பா் என்றாா் அவா்.

மக்களவை அமா்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை அமா்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜூன் 27-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா்.