மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தடுக்கப்பட்டதற்கு கண்டனம்!

திமுக எம்.பி. நாடாளுமன்றத்தில் தடுக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கண்டனம்

News image
கோப்புப் படம்
Updated On :19 ஜூன் 2024, 10:26 am

DIN

நாடாளுமன்றத்தினுள் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா செல்லும்போது சிஐஎஸ்எஃப் காவல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்துல்லா, தான் நாடாளுமன்றத்தில் தடுக்கப்பட்டது தொடர்பாக துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு ஜூன் 18ஆம் தேதியில் ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில் அப்துல்லா கூறியுள்ளதாவது, ”நான் பிற்பகல் 2.40 மணியளவில், நாடாளுமன்ற மாளிகை தோட்டத்திற்குள் சென்றபோது, சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் நான் எதற்காக வந்தேன்? மற்றும் எங்கு செல்லப் போகிறேன்? என்பது குறித்து விசாரிப்பதற்காக என்னைத் தடுத்தனர். சிஐஎஸ்எஃப் அதிகாரிகளின் இந்த செயல்பாட்டால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பிஎஸ்எஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பொறுப்பில் இருந்தபோது இதுபோன்ற தவறான நடத்தைகள் இதற்கு முன்பு நடந்ததில்லை. பணிரீதியாக இல்லாமல்கூட நாடாளுமன்றத்திற்குள் நுழைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. மீதான இந்த நடவடிக்கைக்கு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் சாகேத் கோகலே தெரிவித்ததாவது, ”இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது; மற்றும் வெட்கக்கேடானது. சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், ஒரு எம்.பி.யிடம் ஏன் நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்கள் என்று கேட்க முடியாது. அவையின் உறுப்பினர்களாக, நாடாளுமன்றத்தில் இருப்பது நமது உரிமை. இந்திய எம்.பி.க்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்காகவா சிஐஎஸ்எஃப் மாற்றப்பட்டுள்ளது? உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொறுப்பேற்றுக் கொள்ளுதல் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிஐஎஸ்எஃப் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்காகத் தான் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

2022, டிசம்பர் 13ஆம் தேதியில் மக்களவையில், இரண்டு நபர்கள் மஞ்சள் புகையை வெளியிட்டு கோஷங்களை எழுப்பி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்தனர். இந்த பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணி சிஐஎஸ்எஃப்-விடம் ஒப்படைக்கப்பட்டது. பழைய மற்றும் புதிய நாடாளுமன்றக் கட்டடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகளைப் பாதுகாக்க 3,317 சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.