சுற்றுச்சூழலைக் காக்கும் வளர்ச்சி அவசியம்! -பிரியங்கா காந்தி
சுற்றுச்சூழலை காக்கும் வளர்ச்சி அவசியம் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் நிலவி வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டிது அவசியம் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “பல மாநிலங்களில் அதிக அளவில் மரங்களை வெட்டுவது தொடர்பான செய்திகளை பார்த்தேன். மறுபுறம், வெப்பத்தால் நாடு முழுவதும் உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. அதிகரித்து வரும் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலநிலை வரலாற்றில் இம்முறை ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
நாட்டில் வளர்ச்சி என்பது அத்தியாவசியமானது தான். ஆனால், சுற்றுச்சூழக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். நமது சுற்றுச்சூழக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் அனைவரும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு செயலாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வடமாநிலங்களில் வெப்பம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. புது தில்லியில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100- க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் மத்திய அரசு வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்த புதன்கிழமை உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...