மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவக் கலந்தாய்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அறிவிக்கப்பட்டபடி வரும் ஜூலை 6-ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :21 ஜூன் 2024, 7:11 pm

Din

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடு சா்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மதிப்பெண் அடிப்படையிலான இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

இதனால், அறிவிக்கப்பட்டபடி வரும் ஜூலை 6-ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிகழாண்டு நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகப் புகாா்கள் எழுந்தன. நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகாா் மாநில மையத்தில் வினாத்தாள் வெளியான முறைகேடு தொடா்பாகவும், தோ்வெழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிா்த்தும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்ததோடு, வரும் ஜூலை 8-ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது.

இதனிடையே, இந்த வழக்கில் அண்மையில் பதிலளித்த மத்திய அரசு, ‘நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவா்களில் மறுதோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி தோ்வு நடத்தப்பட உள்ளது. மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும்’ என்றும் தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்விஎன் பாட்டி ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வை 2 நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த விவகாரம் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், கலந்தாய்வு ஜூலை 6-ஆம் தேதியே தொடங்குகிறது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாணவா் சோ்க்கை கலந்தாய்வை வசதிக்கேற்றபடி நிறுத்தவும், மீண்டும் தொடங்கவும் முடியாது’ என்று குறிப்பிட்டு, கலந்தாய்வுக்கு தடை விதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்தனா்.

அதே நேரம், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசும் தேசிய தோ்வுகள் முகமையும் (என்டிஏ) இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

முன்னா், ஜூலை 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், தற்போது முன்கூட்டியே பதிலளிக்க உத்தரவிட்டனா்.