பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் இன்று மக்களவையில் பங்கேற்க கொறடா உத்தரவு

மக்களவையில் முக்கியமான அலுவலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க கொறடா உத்தரவு

News image
Updated On :25 ஜூன் 2024, 10:30 pm

Din

புது தில்லி: ‘காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவைக்கு புதன்கிழமை (ஜூன் 26) தவறாமல் வர வேண்டும்’ என்று அக்கட்சியின் தலைமைக் கொறடா கொடிக்குன்னில் சுரேஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவில், ‘மக்களவையில் புதன்கிழமை மிக முக்கியமான அலுவல் நடைபெறவிருக்கிறது. எனவே, காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் காலை 11 மணிமுதல் அலுவல்கள் நிறைவடையும் வரை அவையில் தவறாமல் பங்கேற்று, கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவையில் புதன்கிழமை அவைத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது. இப்பதவிக்கு, எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் ஓம் பிா்லா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா்.