மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்த பா.ஜ.க. தலைவர்!

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சூரியகாந்த பாட்டீல்.
சூரியகாந்த பாட்டீல்.
சூரியகாந்த பாட்டீல்.படம் | சூரியகாந்த பாட்டீல் எக்ஸ் தளப் பதிவு
Published on
Updated on
1 min read

2014 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல்வாதியுமான சூரியகாந்த ஜெய்வந்தராவ் பாட்டீல், பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார்.

75 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சூரியகாந்த பாட்டீல் தேசியவாத காங்கிரஸில் இணைந்ததற்கு அக்கட்சியின் தலைவர் சரத்பவார், மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் மூத்த தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சரத் பவார் கூறுகையில், “சூரியகாந்தாவின் வருகை நந்தேட், ஹின்ஹூலி, பர்பானி, பீட் ஆகிய மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

சூரியகாந்த பாட்டீல்.
“தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணையாக...”: மயிலாடுதுறை எம்பி பதவியேற்பு

இவரின் மந்தமான செயல்பாடுகளால் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், ஜூன் 22 ஆம் தேதி பாஜகவில் இருந்து அதிகாரபூர்வமாக விலகினார்.

முதலில் காங்கிரஸிலும், பின்னர் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸிலும் இருந்த சூரியகாந்த பாட்டீல் 2014-ல் பாஜகவில் இணைந்தார். 2024 இல் ஹிங்ஹூலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்தார். ஆனால், அந்தத் தொகுதி கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டது.

சூரியகாந்த பாட்டீல்.
அரசமைப்புப் புத்தகத்தை கையிலேந்தி எம்.பி.யாக பதவியேற்றார் ராகுல்

அந்தத் தேர்தலில் சிவசேனை (உத்தவ் அணி) சார்பில் போட்டியிட்ட நாகேஸ் பாபுராவ், சிவசேனையின் பாபு ராவ் ஹோகாலிகரை 1.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

சூரியகாந்த பாட்டீலின் வருகை, அக்டோபரில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற, மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com