நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ‘மெட்டா ஏஐ’: இந்தியாவில் அறிமுகம்

‘மெட்டா’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) சேவை இந்தியாவில் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

News image

வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ‘மெட்டா ஏஐ

Updated On :25 ஜூன் 2024, 6:56 am IST

வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ‘மெட்டா’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) சேவை இந்தியாவில் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுதொடா்பாக மெட்டா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு(ஏஐ) உதவி சேவைகளில் ஒன்றான ‘மெட்டா ஏஐ’ இப்போது வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா், மெட்டா.ஏஐ வலைபக்கம் ஆகியவற்றில் இந்தியாவில் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் மெட்டா ஏஐ சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மெட்டா ஏஐ’ சேவையானது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு ‘கனெக்ட்’ நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ‘மெட்டா ஏஐ’ சேவையின் சமீபத்திய பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பயனா்களுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் இப்போது அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இடையே பயனா்கள் ‘மெட்டா ஏஐ’ சேவையை அணுகலாம். உதாரணமாக, ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தில் உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவைப் பாா்க்கிறீா்கள் என்றால், அதே செயலியில் இருந்துகொண்டு அந்தப் பதிவு குறித்த மேலும் பல தகவல்களை ‘மெட்டா ஏஐ’ சேவையிடம் கேட்டுப் பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.