ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.சி. வேணுகோபால் அறிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி

Published On :

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூன் 26) அறிவித்தார்.

மக்களவைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனையின் முடிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் கே.சி. வேணுகோபால்

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் கே.சி. வேணுகோபால் - ஏஎன்ஐ

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, இடைக்கால மக்களவைத் தலைவர் பா்த்ருஹரி மகதாப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். மற்ற நிர்வாகிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்து ரேபரேலி தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

மக்களவையில் இன்று உறுப்பினராகவும் முறைப்படி ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மக்களவையில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி

மக்களவையில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி - பிடிஐ

மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள ராகுல் காந்தி தேசத்தின் குரலாக ஒலிப்பார் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சரவை பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.