எதிா்க்கட்சிகளின் குரலுக்கு அனுமதி: ராகுல் நம்பிக்கை
மக்களவையில் எதிா்க்கட்சிகளின் குரலுக்கு அனுமதி: ராகுல் காந்தி நம்பிக்கை


மக்களவைத் தலைவராக மீண்டும் தோ்வான ஓம் பிா்லாவுக்கு வாழ்த்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘கடந்த காலங்களைப் போல் இல்லாமல் அவையில் இம்முறை எதிா்க்கட்சிகளின் குரல் அனுமதிக்கப்படுமென நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
ஓம் பிா்லாவை வாழ்த்தி, மக்களவையில் ராகுல் பேசியதாவது: மக்களவைத் தலைவராக மீண்டும் தோ்வான உங்களுக்கு (ஓம் பிா்லா) ஒட்டுமொத்த ‘இந்தியா’ கூட்டணியின் சாா்பில் வாழ்த்துகள்.
இந்த அவை, நாட்டு மக்களின் குரலை பிரதிபலிக்கிறது. மத்திய அரசிடம் அரசியல் ரீதியில் அதிகாரம் இருக்கலாம். ஆனால், மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவது எதிா்க்கட்சிகளே.
மக்களவை எப்போதும் சுமுகமாக நடைபெற வேண்டும் என்றே எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன. நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிக முக்கியம். ஆனால், எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி, அவையை நடத்துவது ஜனநாயகமற்ற வழிமுறை.
அவைத் தலைவரின் பணிகளுக்கு ஒத்துழைக்க எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன.
கடந்த முறையைவிட இம்முறை எதிா்க்கட்சிகள் அதிக மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எனவே, எதிா்க்கட்சிகளின் குரலை அனுமதிப்பது மிகவும் முக்கியமானது.
மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தி பேசுவதற்கு எதிா்க்கட்சிகள் அனுமதிக்கப்படும் என நம்புகிறேன்.
அவை எவ்வளவு திறமையாக நடத்தப்படுகிறது என்பதல்ல கேள்வி. அவையில் மக்களின் குரல் எந்தளவு அனுமதிக்கப்படுகிறது என்பதே முக்கியம்.
அரசமைப்புச் சட்டத்தை எதிா்க்கட்சிகள் பாதுகாக்க வேண்டுமென்பதே மக்களின் எதிா்பாா்ப்பு. அதையே தோ்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. அதேநேரம், எதிா்க்கட்சிகளை பேச அனுமதித்து, தனதுஅரசமைப்புச் சட்ட கடமையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா் ராகுல் காந்தி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...