மக்களவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்களவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: மக்களவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் ஒப்புதலுக்கு பிறகு அவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Published on

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அங்கீகரித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை கூடிய மக்களவைக் கூட்டத்தொடரிலும், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி செயல்படத் தொடங்கினார்.

மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற ஓம் பிர்லாவை மரபுப்படி, பிரதமர் நரேந்திர மோடியுடன், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தார்.

மக்களவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள்: ராகுல் காந்தியின் முதல் உரை!

தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக மக்களவையில் அவைத் தலைவரை வாழ்த்தி தனது முதல் உரையையும் நிகழ்த்தினார்.

இந்த நிலையில், மக்களவை செயலகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்றும், ஜூன் 9, 2024 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com