மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடியரசுத் தலைவர் குறிப்பிடாத 5 முக்கிய பிரச்னைகள்! கார்கே எதிர்வினை!

குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாத 5 முக்கிய பிரச்னைகள் என்று கார்கே பதிவிட்டுள்ளார்.

News image
கார்கே பகிர்ந்த புகைப்படம்
Updated On :27 ஜூன் 2024, 10:46 am

DIN

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் இன்று மோடி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மிக முக்கியமான ஐந்து பிரச்னைகளை குறிப்பிடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

18வது மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கியிருப்பதை முன்னிட்டு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

இது குறித்து எதிர்வினையாற்றியிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி அரசு எழுதிக் கொடுத்த குடியரசுத் தலைவர் உரையைக் கேட்டேன், அதன் மூலம், பிரதமர் மோடி, மெய்மறந்த நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.

இந்த நாட்டு மக்கள், அவரது 400க்கும் கூடுதலான இடங்கள் என்ற முழக்கத்தை நிராகரித்துவிட்டனர், அதுமட்டுமல்லாமல், அந்த எண்ணை விட வெகு தொலைவில் 272 என்ற எண்ணில் வைத்துவிட்டார்கள். இது மோடிக்கு எதிரானதுதான்.

ஆனால், பிரதமர் மோடியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் மோடி எதுவும் மாறவில்லை என்பதுபோல பாசாங்கு செய்கிறார், ஆனால், உண்மை என்னவென்றால், இந்த நாட்டின் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

மாநிலங்களவையில் எனது உரையின் முழு விவரத்தையும் இங்கு அளிக்கிறேன், அதாவது,

1. நீட் முறைகேட்டில் கண்துடைப்பு எடுபடாது

கடந்த 5 ஆண்டுகளில், தேசிய தேர்வு முகமை நடத்திய 66 தேர்வுகளில், வினாத்தாள் கசிவு, முறைகேடு நடந்தது என 12 தேர்வுகள் மீது புகார்கள் எழுந்துள்ளது. இதனால் 75 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாங்கள் பிரிவினைவாத அரசியல் செய்வதாகக் கூறிவிட்டு, மோடி அரசு இந்த பொறுப்பிலிருந்து தப்பி ஓட முடியாது, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீதி கேட்கிறார்கள், இதற்கு மத்திய கல்வித்துறை பொறுப்பேற்க வேண்டும், ஒவ்வொரு இரண்டு இளைஞர்களில் ஒருவர் வேலையின்றி இருக்கிறார், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான எந்த தகவலும் குடியரசுத் தலைவர் உரையில் இல்லை.

ஒட்டுமொத்த உரையிலும், ஐந்து முக்கிய பிரச்னைகள் பேசப்படவில்லை.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள், பயணிகள் ரயில்கள் உள்பட நாட்டில் நிகழும் பயங்கர ரயில் விபத்துகள், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள், தலித், பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு போன்ற ஐந்து முக்கிய பிரச்னைகள் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறவில்லை.

ஒட்டுமொத்தமாக, கடந்த மக்களவைத் தேர்தலில், மக்களால் நிராகரிக்கப்பட்ட பொய்களை எல்லாம், கடைசியாக ஒரு முறை நாடாளுமன்றத்தில் சொல்லி சில கைதட்டல்களையாவது பெறலாம் என்று மோடி அரசு முயன்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.