ஆச்சரியம் அளித்த ஃபிளிப்கார்ட்.. 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் போட்ட காலணி வீடு வந்தது!

ஃபிளிப்கார்ட் இ-வணிக நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் போட்ட காலணி வீடு வந்தது!
இ-வணிக நிறுவனம்
இ-வணிக நிறுவனம்Center-Center-Delhi
Published on
Updated on
1 min read

அஹ்சன் என்ற இளைஞர், ஃபிளிப்கார்ட் என்ற இ-வணிக சேவை செயலி மூலம் ஆர்டர் போட்ட காலணி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்துள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்திடமிருந்து இவருக்கு அழைப்பு வந்த போது தெரிந்திருக்காது, இது மிகப்பெரிய செய்தியாகும் என்று.

தனக்கு நேர்ந்த ஆனந்த அதிர்ச்சி குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதன் மூலம்தான் இந்த சம்பவம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.

அதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம், ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்திருக்கிறார்கள். ஆனால், அது வரவில்லை. இன்று வரும், நாளை வரும் என காத்திருந்தவர், வாழ்வியலின் பரபரப்புகளுக்கு மத்தியில் மறந்தேபோய்விட்டார்.

திடீரென, ஃபிளிப்கார்ட் செயலியில், இன்று நீங்கள் செய்த ஆர்டர் வீடு வரும் என்று செய்தி வந்த போது, அவரது கண்கள் ஒரு முறை சுருங்கி விரித்துத்தான் அந்த செய்தியைப் படித்திருக்கும். அதாவது ஆர்டர் செய்த காலணி இன்று வீட்டுக்கு வரும் என்று செய்தி வந்ததோடு மட்டுமல்லாமல் ஃபிளிப்கார்ட் நிறுவன ஊழியர் அதனை கொண்டுவந்து கொடுத்துள்ளார்.

இந்த ஆனந்த அதிர்ச்சியை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட, அதற்கு பலரும் தங்களது விருப்பக் குறியை பதிவிட்டுள்ளனர்.

இதற்கு, ஃபிளிப்கார்ட் நிறுவனமும், தங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, உங்களது பொறுமைக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com