மெட்டா, அமேஸான், ஃபிளிப்கார்ட், மீஷோ நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம்!

சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை உள்ளிட்ட விதிமீறல்களால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை
சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்
Updated on
2 min read

சட்டத்தை மீறி அனுமதிக்கப்படாத வாக்கி டாக்கிகளை விற்பனைக்குப் பட்டியலிட்டது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக முகநூல் சந்தை தளமான மெட்டா, அமேஸான். ஃபிளிப்கார்ட் மீஷோ ஆகிய இணைய வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதத்தை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விதித்துள்ளது.

அதுபோல, நுகர்வோர் உரிமைகளை மீறியது. அவர்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக சின்மியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ, மாஸ்மேன் டாய்ஸ் உள்ளிட்ட இணைய வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதத்தை சிசிபிஏ விதித்துள்ளது.

வாக்கி-டாக்கி கருவிகள் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை யாரும் இடைமறித்து ஒட்டுக் கேட்க முடியாது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர், பெரும்பாலும் இத்தகைய கருவிகளையே தகவல் தொடர்புக்குப் பயன்படுத்துகின்றனர்.

இதுபோன்ற தகவல்தொடர்பு சாதனங்ளை முறையான அதிர்வலை விவரங்களை வெளியிடாமலும், உரிமத் தகவல்களைத் தெரிவிக்காமலும் விற்பனை செய்வது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறும் செயலாகும்.

இதனிடையே, வாக்கி-டாக்கி உள்ளிட்ட ரேடியோ கருவிகளை இணைய வணிக நிறுவனங்கள் விற்பனை செய்வதை தடுப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு வழிகாட்டுதலையும் சிசிபிஏ அறிவிக்கை செய்தது.

இந்த விதிகளை மீறி வாக்கி-டாக்கி உள்ளிட்ட கருவிகளை விற்பனைக்குப் பட்டியலிட்ட அமேஸான், ஃபிளிப்கார்ட் உள்பட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிசிபிஏ அண்மையில் நோட்டீஸ் பிறப்பித்தது.

ஆனால், அதன் பிறகும் இந்த இணைய வணிக நிறுவனங்களில் வாக்கி-டாக்கி உள்ளிட்ட கருவிகள் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டிருப்பதும். நுகர்வோர் உரிமைகளை மீறியதும் தெரிய வந்தது. அதனடிப்படையில் இந்த நிறுவனங்களுக்கு சிசிபிஏ அபராதமும் விதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை செயலர் நிதி கரே கூறியதாவது: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். தொலைத்தொடர்பு சட்டங்ளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் வாக்கி-டாக்கி கருவியை விற்பனைக்குப் பட்டியலிட்டது மற்றும் நுகர்வோர் உரிமைகளை மீறியது தொடர்பாக 8 இணைய வணிக நிறுவனங்களுக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மொத்தமாக ரூ. 44 லட்சம் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.

இதில், மெட்டா. அமேஸான், ஃபிளிப்கார்ட், மீஷோ ஆகிய இணைய வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சின்மியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ. மாஸ்மேன் டாய்ஸ் உள்ளிட்ட இணைய வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சின்மியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ, மாஸ்மேன் டாய்ஸ் ஆகியவை அபராதத் தொகையை செலுத்திவிட்டன. எஞ்சிய நிறுவனங்கள் இன்னும் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், உரிய தரம் மற்றும் வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்யாத 16,970 பொருள்கள் மற்றும் கருவிகள் விற்பனைக்குப் பட்டியலிட்டிருப்பது தொடர்பாக சின்மியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ, மீஷோ, மாஸ்க்மேன் டாய்ஸ், ட்ரேட் இந்தியா, அந்திரிக்‌ஷ் டெக்னாலஜிஸ், வர்தான்மார்ட், இந்தியாமார்ட், மெட்டா. ஃபிளிப்கார்ட், கிருஷ்ணா மார்ட், அமேஸான் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டும் சிசிபிஏ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது என்றார்.

சித்திரிப்புப் படம்
முகேஷ் அம்பானி வீட்டின் மின்சார செலவு ஒரு மாதத்துக்கு இத்தனை லட்சங்களா?
Summary

CCPA fines Meta, Flipkart Rs 10 lakh each over sale of walkie-talkies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com