ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜக தலைமையகத்தில் போராட்டம் நடத்த ஆம் ஆத்மிக்கு அனுமதி மறுப்பு!

பாஜக தலைமையகத்தில் போராட்டம் நடத்த ஆம் ஆத்மிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News image
- படம் | பிடிஐ (கோப்புப்படம்)
Updated On :29 ஜூன் 2024, 5:29 am

DIN

பாஜக தலைமையகத்தில் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சி அனுமதி பெறவில்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சனிக்கிழமை (ஜூன் 29) காலை 11.30 மணிக்கு பாஜக தலைமையகத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்தது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “தில்லியில் உள்ள டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தில் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி பெறாததால் போராட்டக்காரர்களை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த இடத்தில் தடுப்புகள் போடப்பட்டு துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, டிடியு மார்க்கில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவாலை மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் பொய் வழக்கில் கைது செய்ததை கண்டித்து அக்கட்சியினர் சனிக்கிழமை (ஜூன் 29) போராட்டம் நடத்துவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.