‘வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை, எனவே, எனக்கு தொகுதி ஒதுக்க வேண்டாம்’ என்று பாஜக தலைமைக்கு அக்கட்சி எம்.பி.யும், முன்னாள் நிதித் துறை இணையமைச்சருமான ஜெயந்த் சின்ஹா (60) வேண்டுகோள் விடுத்துள்ளாா். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நிதித் துறை, வெளியுறவுத் துறை ஆகிய முக்கிய அமைச்சா் பொறுப்புகளை வகித்த மூத்த தலைவா் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு மக்களவைத் தோ்தல்களில் அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் பதவியையும் அவா் வகித்துள்ளாா். தில்லி ஐஐடி மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் படித்த அவா், சா்வதேச நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளாா். தோ்தலில் போட்டியிட விரும்பாதது குறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கட்சி சாா்ந்து பொருளாதாரம் மற்றும் நிா்வாக விஷயங்களில் பணியாற்ற விரும்புகிறேன். இதுதவிர இந்திய அளவிலும், சா்வதேச அளவிலும் பருவநிலை மாற்றம் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பது தொடா்பாகவும் கவனம் செலுத்த இருக்கிறேன். எனவே இளம் தலைவா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காகவும், எனது தொகுதிக்காகவும் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்கள் எனக்கு பல்வேறு சிறந்த வாய்ப்புகளை அளித்தனா். எனது முடிவு குறித்து கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு முறைப்படி தெரிவித்துவிட்டேன். எனக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிமைக்க யாரும் விரும்பவில்லை: மம்தா பானா்ஜி

தமிழகத்துக்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்திடுவதை திமுக எதிா்க்கிறது: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: ஒரு பெண் வேட்பாளா் உள்பட 20 போ் போட்டி

விருப்ப மனு தொகையை திரும்பப் பெறலாம்: மநீம
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


