குஜராத்தில் 3 ஆண்டுகளில் 25,478 தற்கொலைகள்; பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன்?- கார்கே கேள்வி

தற்கொலைகள் குறித்து பிரதமர் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் 3 ஆண்டுகளில் 25,478 தற்கொலைகள்; பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன்?- கார்கே கேள்வி

பாஜக ஆளும் குஜராத்தில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், தற்கொலைகள் குறித்து பிரதமர் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குஜராத் சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட தரவுகளின்படி, மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 25,478 தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அவர்களில் 500 பேர் மாணவர்கள் என்பது வேதனையாக உள்ளது என கவலை தெரிவித்துள்ள கார்கே, தனது சொந்த மாநிலத்தில் நடந்த மனித அவலங்கள் குறித்து பிரதமர் மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலம் மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக விமர்சித்தார். மேலும் தரவு "விரக்தி, நம்பிக்கையின்மை மற்றும் நிறைவேற்றப்படாத குறைகளுடன் மக்கள் போராடும் மோசமான சூழ்நிலையே நிலவுகிறது.

குஜராத்தில் 3 ஆண்டுகளில் 25,478 தற்கொலைகள்; பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன்?- கார்கே கேள்வி
தகவல் தொழில்நுட்பத் துறை பிப்ரவரியில் மேற்கொண்ட ஆள்குறைப்பு இவ்வளவா?

“முன்னேற்றம் மற்றும் செழிப்பு என்று பெருமை கொள்ளும் ஒரு மாநிலத்தில், மக்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவது மனசாட்சிக்கு விரோதமானது. நாட்டில் ஏற்கனவே பல அநீதிகளை இழைத்துள்ள பாஜகவின் இரட்டை எஞ்சின் தவறான நிர்வாகத்திற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. அதன் மாநில மற்றும் மத்திய அரசு வேலை காலியிடங்களை வெளியிடுவது மற்றும் நிரப்புவது மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது,” என்று கார்கே கூறினார்.

தனித்தனியாக, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் நாட்டில் இளைஞர்களுக்கு பேரழிவு நிலவி வருவதாகவும், மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு குஜராத் அரசை வலியுறுத்திய கார்கே, மேலும் மாநிலத்தின் முக்கியமான பிரச்னைக்கு தீர்வு காண உடனடி மற்றும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் மோசமாக உள்ளது, இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் ராணுவ வீரர்களாக வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் ரஷியாவில் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை வழங்கியிருந்தால், இளைஞர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com