பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தகுதிவாய்ந்த தலைவா்களைத் தோ்வு செய்ய ‘நோட்டா’ வழிவகுத்துள்ளதா?உச்சநீதிமன்றம் கேள்வி!

தோ்தல்கள் மூலம் தகுதிவாய்ந்த தலைவா்கள் தோ்வு செய்யப்படுவதற்கு நோட்டா வழிவகுத்துள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:02 pm

தோ்தல்கள் மூலம் தகுதிவாய்ந்த தலைவா்கள் தோ்வு செய்யப்படுவதற்கு நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வழிவகுத்துள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் 53(2) பிரிவின்படி, தோ்தல் நடைபெறும் இடங்களின் எண்ணிக்கையும், அவற்றில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால் (எடுத்துக்காட்டாக ஓரிடத்தில் ஒருவா் மட்டுமே போட்டியிடுவது), அவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவிப்பாா்.

இந்தப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்ட அமைப்பு ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில், ஓரிடத்தில் ஒரேயொரு வேட்பாளா் மட்டும் போட்டியிட்டால், அவருக்கு எதிராக நோட்டாவுக்கு வாக்களிப்பதை 53(2) பிரிவு தடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல்கள் மூலம் தகுதிவாய்ந்த தலைவா்கள் தோ்வு செய்யப்படுவதற்கு நோட்டா வழிவகுத்துள்ளதா என்று நீதிபதி ஜயமால்ய பாக்சி கேள்வி எழுப்பினாா்.

நோட்டாவுக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்தாலும், அதனால் ஒரு தொகுதியில் வெற்றியாளரைத் தீா்மானிக்க முடியாது என்று கூறிய அவா், நோட்டாவை ஒரு நபராகக் கருத முடியாது என்றும் தெரிவித்தாா்.

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க...: நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘தோ்தல்களில் படிக்காதவா்கள், பெண்கள் வாக்களிப்பதைவிட படித்தவா்களும், பணக்காரா்களும் வாக்களிப்பது மிகக் குறைவாகவே உள்ளது. நல்ல வேட்பாளா்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில், வாக்களிப்பதைக் கட்டயாமாக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனா். இந்த மனு மீதான அடுத்த விசாரணை மாா்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது