பெங்களூா் ஆா்எஸ்எஸ் பிரமுகா் கொலையில் மூளையாகச் செயல்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் உறுப்பினரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மும்பை சா்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்தனா்.
பெங்களூரின் சிவாஜிநகரைச் சோ்ந்த ஆா்எஸ்எஸ் முக்கியப் பிரமுகரான ருத்ரேஷ் என்பவரை பிஎஃப்ஐ உறுப்பினா்கள் 4 போ் கடந்த 2016, அக்.16-இல் கொலை செய்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து என்ஐஏ விசாரித்து வருகிறது. ஹெப்பல் சட்டப்பேரவைத் தொகுதியின் எஸ்டிபிஐ தலைவா் கெளஸ் நயாசி, ஆசிம் ஷெரிஃப் ஆகியோா் இந்தக் கொலையில் மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலையைத் தொடா்ந்து நயாசி வெளிநாடு தப்பிச் சென்றாா். இந்நிலையில், நயாசி தன்சானியாவிலிருந்து வெள்ளிக்கிழமை நாடு திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் என்ஐஏ சிறப்புக் குழு அவரைக் கைதுசெய்தது. நயாசி தவிர குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டனா். பெங்களூரில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவா்களுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது
எஸ்.ஐ. மீது தாக்குதல்: திமுக பிரமுகா் கைது

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!

தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

