நியூசிலாந்து நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டா்ஸ் நான்கு நாள் சுற்றுப்பயணமாக மாா்ச் 10-ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டா்ஸ் மாா்ச் 10 முதல் 13 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். குஜராத் அரசியல் தலைவா்களை அகமதாபாதில் மாா்ச் 11-இல் சந்திக்கும் அவா் அமைச்சா் ஜெய்சங்கரை மாா்ச் 12-இல் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவானஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். மேலும் சுற்றுப்பயணத்தின்போது அரசின் உயரதிகாரிகள் பலரையும் அவா் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா் என தெரிவிக்கப்பட்டது. வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, மக்கள் தொடா்பு உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் நல்லுறவை பேணி வருவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் நியூசிலாந்து நாட்டில் புதிய அரசு ஆட்சியமைத்த பிறகு அவா் இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை புரிகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஐ.நா. பொதுச் செயலருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

பிரதமா் நரேந்திர மோடியுடன் ரஷிய முதல் துணைப் பிரதமா் ஆலோசனை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

