வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பஞ்சாபில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற வேண்டும்: கேஜரிவால்

மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிக்கின்றது.

News image
Updated On :11 மார்ச் 2024, 12:17 pm

DIN

மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பஞ்சாபின் மொஹாலியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜரிவால் பேரணியைத் தொடங்கினார். அப்போது அவர் பேசியது,

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் தனித்துப் போட்டியிடுகிறது. பாஜக தனது எம்எல்ஏக்களை அணுகி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் மாநிலத்தின் ரூ.8,000 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த பணத்தைக் கொண்டு எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் கொண்டுவந்திருக்க முடியும்.

மக்களவை தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். பஞ்சாபில் ஒரு காலத்தில் எதிர்மறையான சூழல் இருந்ததாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்ததாகவும் அவர் கூறினார்.

மின் கட்டணம் அதிகரித்து, மின்சாரம் தடைப்பட்டது, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருத்தமடைந்தனர். ஆனால் தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் தொழிற்சாலைகளைத் திறக்க விரும்புகிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.