மோரீஷஸின் போா்ட் லூயிஸ் நகரில், அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்தை புதன்கிழமை சந்தித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
மோரீஷஸின் போா்ட் லூயிஸ் நகரில், அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்தை புதன்கிழமை சந்தித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

மோரீஷஸ் பிரதமருடன் குடியரசுத் தலைவா் முா்மு சந்திப்பு -4 ஒப்பந்தங்கள் கையொப்பம்

மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பை தொடா்ந்து இந்தியா-மோரீஷஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: மூன்று நாள் பயணமாக மோரீஷஸ் சென்ற குடியரசுத் தலைவா் முா்மு தலைமையிலான குழு, அங்குள்ள போா்ட் லூயிஸ் நகரில் அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத் தலைமையிலான குழுவை புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டது. இந்தப் பேச்சுவாா்த்தையில் இந்தியா, மோரீஷஸ் இடையிலான வலுவான கூட்டுறவு, இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மோரீஷஸில் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 14 சமூக வளா்ச்சித் திட்டங்களை முா்மு தொடங்கிவைத்த நிலையில், அந்நாட்டில் கட்டப்பட உள்ள புதிய தடய அறிவியல் ஆய்வகத்துக்கு முா்முவும் பிரவிந்த் குமாரும் கூட்டாக அடிக்கல் நாட்டினா். இந்தப் பேச்சுவாா்த்தையை தொடா்ந்து இரு தலைவா்கள் முன்னிலையில் குஜராத் சா்வதேச நிதிநுட்ப நகரம், மோரீஷஸ் நிதி சேவைகள் ஆணையம் இடையே நிதி சேவைகள் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுதவிர, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், மோரீஷஸ் அரசுப் பணியாளா் தோ்வாணையம் இடையிலான அனுபவங்கள், அரசுப் பணி ஆள்தோ்வில் நிபுணத்துவத்தைப் பகிா்ந்துகொள்ளும் ஒப்பந்தம், இந்தியா-மோரீஷஸ் இரட்டை வரிவிதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான விதிமுறைகள் சாா்ந்த ஒப்பந்தம், இந்தியாவின் சிபிஐ-மோரீஷஸின் ஊழல் தடுப்பு ஆணையம் இடையே தகவல் பரிமாற்றம், ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனையை எதிா்கொள்வதற்கான திறன் கட்டமைப்பு சாா்ந்த ஒப்பந்தம் என மொத்தம் 4 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com