நான்கு வழியாகும் திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலை!

திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அமையவிருக்கிறது.
வெறிச்சோடியது.
வெறிச்சோடியது.

சென்னை: திருவள்ளூர் - திருப்பதி இடையே ரூ.985 கோடியில் நான்கு வழிச்சாலையாக அமையும் நெடுஞ்சாலைப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைக் கழகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கிறது.

இந்த சாலை அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டால் திருவள்ளூர் - திருப்பதி இடையேயான பயணம் வெறும் 90 நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணி நிறைவடைந்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

வெறிச்சோடியது.
எச்சரிக்கை! தூக்கத்தில் பிரச்னையா.. அது மூளை, நினைவாற்றலை பாதிக்கலாம்!!

இந்த 44 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்குள், உள்ளூர் மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் நுழைவதற்கோ, கடப்பதற்கோ வாய்ப்பு இருக்காது என்றும், அணுகு சாலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, இரண்டு சுங்கச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, அங்கு மட்டுமே அணுகு சாலைகள் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இரண்டு சாலைகள் இருக்கும் இப்பகுதியில் நான்குவழிச் சாலை சர்வீஸ் சாலைகளுடன் அமைக்கப்படவிருக்கிறது, முக்கிய சந்திப்புப் பகுதிகளில் மக்கள் இந்த புதிய சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடந்து செல்ல 20 கீழ்மட்ட சாலைகள் உருவாக்கப்படவிருக்கிறது. சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியதும், இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.

எச்எச்-716 என்று அறியப்படும் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையானது பாடியில் தொடங்குகிறது. இது திருநின்றவூர் வரை நான்குவழிச்சாலையாக உள்ளது. நடுவில், அதாவது திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே ரூ.304 கோடியில் நான்குவழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. அப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்துவிடும். இதனால், திருப்பதி - சென்னை இடையே, திருவள்ளூர் - திருநின்றவூர் பகுதியில் ஏற்படும் நெரிசலைத் தவிர்த்து, ஒட்டுமொத்த பாதையும் நெரிசலின்றி அமைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மக்கள் கூறுவது என்னவென்றால், இப்பணி தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதைய நிலையில், இங்கு ஆறு வழிச்சாலை தேவைப்படும் அளவுக்கு வாகன நெரிசல் காணப்படுகிறது. நான்குவழிச்சாலையே இப்போதுதான் வரவிருக்கிறது என்கிறார்கள்.

இதில் பாடி - திருநின்றவூர் இடையேயான வழிப்பாதை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட சிக்கல்களால் பல காலம் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com