மாதிரி படம்
மாதிரி படம்IANS

திறன்பேசியில் இந்தியர்கள் என்ன செய்கிறார்கள்? ஆய்வு தரும் தகவல்!

திறன்பேசி லாக் ஸ்கிரீனில் செய்திகளை அணுகும் 23.5 கோடி இந்தியர்கள்

23.5 கோடிக்கும் அதிகமான இந்திய பயனர்கள் தங்கள் திறன்பேசியின் உள்நுழைவு சாளரத்தின் மூலமாக செய்திகளை (கன்டன்ட்) பெறுவதாக புதிய அறிக்கைவொன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.

கடவுச்சொல் சாளர செயலியான கிளான்ஸ் வெளியிட்ட இந்த அறிக்கையில், மெட்ரோ நகரங்களைச் சேர்ந்தவர்கள் 55 சதவிகிதம் பேரும் அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் 45 சதவிகிதம் பேரும் கன்டன்ட்களை இந்த சாளரம் வழியாக காண்கின்றனர்.

மேலும் அந்த அறிக்கை தெரிவித்தாவது:

23.5 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் செய்திகள் மற்றும் இணைய அனுபவத்தை அவர்களது திறன்பேசியின் நுழைவு சாளரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.

பாலின வேறுபாட்டில் பார்த்தால் அவ்வாறு பயன்படுத்துபவர்களில் 61 சதவிகிதம் பேர் ஆண்களாகவும் 39 சதவிகிதம் பேர் பெண்களாகவும் உள்ளனர்.

முதல் நிலையில் இவர்களின் தேர்வாக இருக்கும் தலைப்புகள் இந்திய செய்திகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவையே. இவை முறையே 19, 18 மற்றும் 16 சதவிகிதம் பேரால் தேர்வு செய்யப்படுகிறது என அறிக்கை தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com