சிஏஏ சட்டத்திற்கு எதிரான வழக்கு: மார்ச் 19-ல் விசாரணை

குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கின் விசாரணை வரும் மார்ச் 19 ஆம் தேதி விசாரணை வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகளை வரும் மார்ச் 19 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் மார்ச் 11 ஆம் அமலுக்கு வந்தது. மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்ற தலைப்பில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை செய்தது. அதன்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமைமுதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையிலல், சிஏஏ-வுக்கு எதிராக 190-க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியதை நிறுத்த வேண்டும் என்று மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இவ்ழக்கை இன்று விசாரித்தை உச்ச நீதிமன்றம், குடியரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க மனுதாரர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்துள்ளது.

மேலும், இவ்வழக்கு மார்ச் 19 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com