ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்
-

நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதாகவும், ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புது தில்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு

முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்
எந்தெந்த மாநிலங்களில் எப்போது வாக்குப்பதிவு? மக்களவைத் தேர்தலின் முழு அட்டவணை

முதல் கட்டம்

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது.

இரண்டாம் கட்டம்

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

மூன்றாம் கட்டம்

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நான்காம் கட்டம்

நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டம்

ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது. அதில், பிகார் 5,ஜார்க்கண்ட் 3, மகாராஷ்டிரம் 13, ஒடிசா 5, உத்திரப் பிரதேசம் 14, மேற்கு வங்கம் 7, ஜம்மு-காஷ்மீர் 1, லடாக் 1 பகுதிகளில் வாக்குப்பதிவு.

ஆறாம் கட்டம்

ஆறாம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஏழாம் கட்டம்

ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

ஏழு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் கிட்டத்தட்ட 45 நாள்கள் இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com