மார்ச் 19-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ஜெய்ராம் ரமேஷ்

மார்ச் 19-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

தில்லியில் நாளை மறுநாள் (மார்ச். 19) காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலுக்கு இக்க்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
மதிமுக, காங்கிரஸ் தொகுதிகள்?- நாளை வெளியாக வாய்ப்பு

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நாளை மறுநாள்(மார்ச். 19) காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்திற்கு பிறகு, எங்களது தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சுமார் ரூ. 6000 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்பட்டியலில் காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது." எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com