பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எதிர்பார்ப்புகளை வீழ்த்தியிருக்கும் பட்ஜெட்: காங்கிரஸ் கருத்து

எதிர்பார்ப்புகளை வீழ்த்தியிருக்கும் பட்ஜெட் என்று காங்கிரஸ் கருத்து

ஜெய்ராம் ரமேஷ் - ENS

Published On :

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் மந்தமான பட்ஜெட் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மத்திய பட்ஜெட் குறித்து ஏற்படுத்தப்பட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளை எல்லாம், பட்ஜெட் உரை தவிடுபொடியாக்கியிருக்கிறது.

முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இதனால், இது வெளிப்படைத் தன்மையற்ற பட்ஜெட்டாக உள்ளது.

பட்ஜெட் கோப்புகளை முழுமையாக படிக்க வேண்டும். உரையில் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

90 நிமிட உரையில், மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. சில வரிச் சலுகைகள், தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கான திட்டங்கள், புதிய ரயில்கள் என வழக்கமான பட்ஜெட் அறிவிப்புகள் ஒன்றுகூட இல்லாததால், கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.