மார்ச் 21க்குள் தேர்தல் பத்திர முழு தரவுகள்: எஸ்பிஐக்கு உத்தரவு

மார்ச் 21க்குள் தேர்தல் பத்திர முழு தரவுகளை அளிக்க எஸ்பிஐக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 21க்குள் தேர்தல் பத்திர முழு தரவுகள்: எஸ்பிஐக்கு உத்தரவு

தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் மூன்று நாள்களுக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என எஸ்பிஐ வங்கி மேலாண் இயக்குநருக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவரின் பெயர், சீரியல் எண்கள், ஆல்ஃபா நூமரிக் எண்கள் என அனைத்து தரவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய தரவுகளில், இல்லாமல் போன தேர்தல் நன்கொடை பத்திரத்தின் வரிசை எண்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விவரங்களை வழங்கியது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை மார்ச் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு எஸ்பிஐ வங்கியின் மேலாண் இயக்குநருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இப்பத்திரங்கள் விநியோகம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவும், அதனை தேர்தல் ஆணையம், தனது வலைதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிடவும் மார்ச் 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது

தேர்தல் பத்திர வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்பிஐ நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது குறப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com