ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அமலாக்கத் துறையால் கைதானதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல்

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதாவை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image
கவிதா
Updated On :18 மார்ச் 2024, 4:42 pm

DIN

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சித் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் கட்சி எம்எல்சி-யுமான கே.கவிதாவை அமலாக்கத் துறையினா் ஹைதராபாதில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதனைத் தொடர்ந்து, கவிதாவை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி தொகையை சட்டவிரோதமாக வழங்கியதாக வழக்கு விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், தில்லி கலால் கொள்கை வழக்கில் கவிதாவுக்கு முக்கிய தொடர்பிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது அமலாக்கத்துறை.

தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் இதுவரை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 128.79 கோடி சொத்துக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தன் மீது வேண்டுமென்றே புனையப்பட்டுள்ள வழக்கு இது என்றும் கவிதா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

அமலாக்கத்துறை காவலிலுள்ள கவிதாவை அவரது சகோதரரும் தெலங்கானாவின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராம ராவ் சந்தித்துப் பேசியதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.