புது தில்லி: தமிழிசை செளந்தரராஜனின் தெலங்கானா ஆளுநா் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பதவிகள் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக்கொண்டாா். இந்தப் பதவிகள் ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழிசையின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டாா். அவா் வகித்த தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பதவிகள் முறையாக நிரப்பப்படும் வரை, கூடுதல் பொறுப்பாக ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் குடியரசுத் தலைவா் வழங்கியுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநா் பதவியை தமிழிசை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவா் மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தமிழிசை கூறுகையில், ‘தீவிர மக்கள் பணியாற்றவே ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்’ என்றாா். 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை, திமுகவின் கனிமொழியிடம் தோல்வியுற்றாா்.
தொடர்புடையது

உண்மை தெரிந்தாக வேண்டும்!
குடியரசுத் தலைவா், துணை தலைவருடன் தமிழக ஆளுநா் அா்லேகா் சந்திப்பு!

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா்

ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம்: கேரள ஆளுநருக்கு தமிழக கூடுதல் பொறுப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


