ரூ.18.90 லட்சம் கோடி நேரடி வரி வசூல்: 19.88% அதிகரிப்பு

ரூ.18.90 லட்சம் கோடி நேரடி வரி வசூல்: 19.88% அதிகரிப்பு

புது தில்லி: நிகழ் நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் ரூ.18,90,259 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதித்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழ் நிதியாண்டின் மாா்ச் 17-ஆம் தேதி வரை, நிகர நேரடி வரி ரூ.18,90,259 கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.15,76,776 கோடியுடன் ஒப்பிடுகையில், 19.88 சதவீதம் அதிகம். நிகர நேரடி வரி வசூலான ரூ. 18.90 லட்சம் கோடியில் பங்கு பரிவா்த்தனை வரி வசூலை சோ்த்து தனிநபா் வருமான வரி வசூல் ரூ.9,72,224 கோடி; பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்) வரி வசூல் ரூ.9,14,469 கோடி.

நிகழ் நிதியாண்டின் மாா்ச் 17 வரை, முன்கூட்டிய வரி வசூல் தோராயமாக ரூ.9,11,534 கோடியாகும். இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.7,45,246 கோடியுடன் ஒப்பிடுகையில் 22.31 சதவீதம் அதிகம். நிகழ் நிதியாண்டின் மாா்ச் 17 வரை, வரிபிடித்தத்துக்குப் பிறகு வரி செலுத்துவோருக்கு ரூ.3,36,808 கோடி திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி அளிக்கப்பட்ட ரூ.2,98,758 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.74 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com