யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு
ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: மக்களவைத் தோ்தலையொட்டி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வை மே 26-ஆம் தேதியிலிருந்து ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வுகளை யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வை மே 26-ஆம் தேதி நடத்த யுபிஎஸ்சி திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் ஜூன் 16-ஆம் தேதிக்கு முதல்நிலைத் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்தது. 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com