200 பெயர்கள் பரிந்துரை.. 2 மணி நேரத்தில் ஆணையர்கள் தேர்வானது எப்படி? உச்ச நீதிமன்றம்

200 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வெறும் 2 மணி நேரத்தில் ஆணையர்கள் தேர்வானது எப்படி? என உச்ச நீதிமன்றம் கேள்வி.
தெலங்கானாவில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
தெலங்கானாவில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தேர்தல் ஆணையத்துக்கு புதிய தேர்தல் ஆணையர்களுக்கான தேர்வில் 200 பெயர்களை பரிந்துரைத்த நிலையில், வெறும் இரண்டு மணி நேரத்தில் தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதிய தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்டீசீவ் கன்னா அமர்வு, தேர்தல் ஆணையர்களைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. தேர்தல் ஆணையர்களின் தேர்வு நடைமுறைப்பற்றித்தான் கேள்வி எழுப்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.

புதிய தேர்தல் ஆணையர்களின் நியமனத்துக்குத் தடை விதித்ததோடு, வழக்கில் விரிவான உத்தரவு பிறகு பிறப்பிக்கப்படும் என்றும், விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை நிறுத்தி வைப்பது தற்போதைய சூழ்நிலையில் குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணையின்போது, தேர்தல் ஆணையர் தேடல் குழு 200 பெயர்களை பரிந்துரைத்த நிலையில், வெறும் இரண்டு மணி நேரத்தில், ஆலோசனைக் கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் மக்களை ஏன் சந்தேகக் கண்ணோடு பார்க்க இடம் கொடுக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com