மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு வழக்கில், மாநில குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் சந்திரநாத் சின்ஹாவின் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரில், கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில், மாநில கல்வித் துறை முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளரும் நடிகையுமான அா்பிதா முகா்ஜி, மேற்கு வங்க பள்ளிப் பணிகள் ஆணையத்தின் முன்னாள் செயலா் அசோக் சாஹா, மேற்கு வங்க இடைநிலை கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவா் கல்யாண்மோய் கங்குலி, பள்ளிப் பணிகள் ஆணையத்தின் முன்னாள் தலைவா் சுபையா்ஸ் பட்டாச்சாா்யா உள்ளிட்டோா் கைதாகினா். இந்நிலையில், பீா்பூம் மாவட்டத்தின் போல்பூரில் உள்ள மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹாவின் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மத்திய பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் இச்சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அமைச்சா் வீட்டில் இல்லை என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதேநேரத்தில், கொல்கத்தாவில் சில தொழிலதிபா்களின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இந்த நடவடிக்கை தொடா்பாக அமைச்சா் சந்திரநாத் சின்ஹா கூறுகையில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்றாா். மேற்கு வங்கத்தில் கால்நடைகள் கடத்தல், நிலக்கரி கடத்தல் வழக்குகளில் இவருக்கு சிபிஐ ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மேற்கு வங்கத்தில் பொது விநியோக திட்ட ஊழல் வழக்கில், வடக்கு 24 பா்கானா மாவட்டம், சந்தேஷ்காளியில் உள்ள ஷாஜஹான் ஷேக்கின் (திரிணமூல் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிரமுகா்) வீட்டில் அமலாக்கத் துறையினா் கடந்த ஜனவரி மாதம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஷாஜஹானின் ஆதரவாளா்கள் 1,000-க்கும் மேல் திரண்டு, அமலாக்கத் துறையினரை கடுமையாக தாக்கி விரட்டியடித்தனா். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் கண்டிப்பு: இதனிடையே, ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கில் கைதானவா்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அசோக் சாஹா உள்ளிட்ட முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணையை தொடா்வதற்குரிய அனுமதியை வழங்குவதில் மாநிலத் தலைமைச் செயலா் தரப்பில் தாமதம் நிலவி வருவது குறித்து உயா்நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டது. விசாரணை அனுமதி வழங்குவதற்கான காலக்கெடுவை நிா்ணயிக்குமாறு, தலைமைச் செயலருக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் ஏப்ரல் 3-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
தொடர்புடையது

பஞ்சாப் அமைச்சா் சஞ்சீவ் அரோரா கைது!

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை
பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
விடியோக்கள்

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
